அழகரார்யா காவ்யம்
– இயற்றியவர் சேலம் கவிஞர் சக்திகொடி சண்முகம்

Nowka kaviyam
ஸ்ரீ தியாகராஜ சுவாமிகளின் தெலுகு மொழி நௌகா காவியத்தை, தஞ்சாவூர் சிவாஜி அரசின் ஆஸ்தான கவிஞரான சௌராஷ்டிர கவி வேங்கட சூரி சமஸ்கிருதத்தில் இயற்றினார். அதே காவியத்தை சௌராஷ்டிர மொழியில் இயற்றியவர் புட்டா அழகரார்யா அவர்கள். சேலத்தில் புட்டா அழகரார்யா வெங்கட சூரி சுவாமிகளை பிரசங்கம் செய்ய அழைத்தபோது, அவரிடம் சிஷ்யராக சேர்ந்து சௌராஷ்டிர மொழியில், பகவான் கிருஷ்ணரின் தங்கப் படகு பயணம் என்ற நௌகா காவியத்தை சௌராஷ்டிர மொழியில் ‘ பஞ்சல் சரித்ரு‘ என்ற சௌராஷ்டிர நௌகா காவியம் எழுதினார்.
மொத்தம் நூற்றி பன்னிரண்டு கீர்த்தனைகளாக இயற்றினார். இதில் எண்பத்தி ஐந்து கீர்த்தனைகள் கர்நாடக சங்கீத ராகங்களில் அமைந்துள்ளது.
கோபிகள் அகங்காரம் கொண்டிருந்ததை தங்கப் படகு பயணத்தின் பொது கிருஷ்ணர் விளையாட்டாக அதனை பக்தி உணர்வாக மாற்றினார். இந்த சம்பவத்தை கூறும் இந்த சௌராஷ்டிர நௌகா காவியம் இயற்றிய அழகரார்யா அவர்களின் வரலாற்றை கவிஞர் சக்திகொடி சண்முகம் அவர்களின் வார்த்தைகளில் படிப்போம் வாருங்கள்.
ஸ்ரீ கணபதி ஸுதிதி
1 . சேலம்மா நகர்தான் சேமங்கள் பெற்றிடவே
காலங் காலமாய் நிலைத்துள்ள – ஞானமுதல்வா !
கணபதியே நின்பொன்தாள் களிப்போடு பணிந்தோம்நாம்
கணமேனும் தளராது காக்க !
2 . காத்திடு கணபதியே கவிஞன்நல் மனத்தானாம்
சாத்திரம் பயின்ற சதுரன் – அழகரார்யான்
வழக்கமும் வாழ்வும் நல்வாக்கும் பற்றிநான்
விளக்கமாய் பாடினேன் வாழ்த்து !
ஸ்ரீ சுகவனேஸ்வரர் ஸ்துதி
3 . சுகவனேசா எங்கள் சொர்ணம்மை மணவாளா
அகமகிழ்ந்தே அழகரார்யான் புகழ்வாழ – சகம்புகழ
உம்மை பணிந்தே உளமினிக்கப் பாடுகிறேன்
என்னைநீ யெப்போதும் ஏந்து !
ஸ்ரீ ஸ்வர்ணாம்பிகை ஸ்துதி
4 . என்னம்மை சொர்ணாம்பா எழில்மிக்க கண்ணாம்பா
உன்னைப் பணிந்தேனான் அழகரார்யான் – தன்னைபாட
குழந்தையின் மழலையை குற்றமெனநீ கொள்ளாமல்
அழகாக என்னைநீ ஆள்க !
ஸ்ரீ சுப்பிரமணியர் ஸ்துதி
5 . ஆறுமுகனே அனைவர்க்கும் மாறுதலைதந் திடும்வள்ளல்
தேறுமுகமாக நாவிலிருந்து உதவிடுக – நம்மழகர்
பழமான நல்வித்தகர் பாங்காகச் சான்றோரின்
வளமான வாழ்வை வாழ்த்தி !
..
..
மற்றும் ஸ்ரீ சரஸ்வதி, நாராயண, ஹயக்ரீவ, லக்ஷ்மி நரசிம்ம, கருட, ராம, ஆஞ்சநேய, லக்ஷ்மி ஸ்துதி முடித்து அவை அடக்கம் வெண்பா தருகிறார் கவிஞர் சண்முகம்
அவை அடக்கம்
14 . சேலம்மா நகரத்து சௌராஷ்டிர குலத்துதித்த
சீலம்மிக்க அளகரார்யச் செம்மல்தம் வாழ்வைச்
சற்றும்சால் பில்லாச் சிறியேன்நான் சாற்றுகிறேன்
குற்றம்நீக்கிக் குணம்கொள்ளக் குவித்தேன்கரம் !
அழகர் அவதரித்த அழகுப்பேட்டை
சேலத்தில்பா ளையம்பேட்டை பட்டிக்களும்தான் எத்தனையோ
காலம்காலமா யதில் பொன்னமாப் பேட்டைசெங் கதிராய்நின் றது
கன்னடமும் களிதெலுங்கும் கவிந்தமிழும் சௌரஷ்டிரமும்
எந்நாளும் பேசுமெழில் மிக்கமக்கள் தறிநெய்து
நெசவின் பெருமைதனை நெடுந்தொலைவு சேர்த்திட்டார்
வசவில்லாவாம் மக்கள்வாழ் பகுதிபொன் னென்றால் தவறோ?
வாரணமாயிரம் சூழவுலகை வலம்வந்த கார்வண்ணன்
நாரணனிங்கு லக்ஷ்மியுடன்கூடி லக்ஷ்மிந்ரூ சிம்மனாய்
அழகிய வடிவுடன் அனைவரயும் கவர்ந்திழுக்கும்
அழகரசந்தான் சௌந்திரராசனாய் கிருஷ்ணனாய்
நன்றாக நிலைத்துநிற்க நாளும் ராமர் பேர்பாடி
ஒன்றாத வுள்ளதினரை வுயர்த்துகின்ற ஆஞ்ஜனேயனரும்
தாழ்ந்த மனதினரையும் தாங்கிநிருத்தும் கடவுளர்கள்
வாழ்ந்திருக்கும் மிப்பேட்டைக்கு எப்பேட்டை தாநீடு?
இத்தனை சிறப்புடைய போன்னாம்மபேட்டையில்
பத்தரை மாற்றுபொன்னாம் நம்மழகர்தாம் அவதரித்தாரே !
ஸ்ரீமத் அழகரார்யர் திருஅவதாரம்
சேலம்வாழ் பெருமக்கள் சௌராஷ்டிரா நன்மக்கள்
ஆலம்வேராய் ஆண்டுகள் பலவாய் வாழ்ந்துநின்றே
நகரம்வளரத் தொண்டுகள் இறைபணி வர்த்தகமும்
பகரமுடியாச் சிறப்புடைய பட்டுநெசவு என்றே
எத்தனை தொழில்கள் எத்தனை வழிகள் 5
அத்தனை துறையிலும் அழகாய் மிளிர்வோர்
என்றோ ஒரு நாள் சௌராடிரத் திலிருந்து
நின்று நிலைக்கவந்த இம்மக்கள் தம்மொழியால்
கொண்டுள்ள பற்றோ குறையாது அழியாது !
விண்டுசொல்ல முடியாதவர் வியத்தகு பெருமைகளை ! 10
ஸமூகப்பழக்க வழக்கங்களை சற்றேயும் தளர்த்தாத
ஸமூகத்தார் அருமைகளை அளவாகச் சொல்லிமுடியுமோ?
மக்கள் மனத்துயர்நீங்க மழைவரப் பாடிய
மகான்ஸ்ரீ சுகந்ததீர்தரை மறக்கவும்கூடுமோ?
கர்நாடகச் சங்கீதமென்று கற்றோர் மதிக்கின்ற 15
பொன்னான இசையினிலே பொலிந்தவர்தான் தியாகையர்;
அன்னவர்தம் மருமைமிகு மாணாக்கர் பலருள்
எந்நாளும் நினைக்கத் தக்கார் வேங்கடரமணர்;
வாலாஜா பேட்டைசார் வேங்கடச் சான்றோர்
காலைதா லழியாத கீர்த்தனைகள் பலசெய்தார் 20
வேங்கட ரமணரின் வேட்புமிகு மாணாக்கர்
வேங்கடசூரி சுவாமிகளென்னும்வரகவி !
தஞ்சை மன்னரின் அரசவைக் கவிஞரவர்
நெஞ்சை தொடும்வண்ணம் ராமாயணம் கிருஷ்ணாவளி
என்றேபல காவியங்களை மொழிகள் பலவற்றில் 25
பண்ணும் பரதமுமிணைந்து செயல்படப் பாடினார்;
கண்ணனின் கதைகளை லீலைகளை ஜெயதேவர்தம்
மன்னனைக் கண்டுகேட்டுப் பாகாயப்பாடினார் அஷ்டபதி!
வடமொழியில் ஜெயதேவர்பா டியபாடல்களைச் சௌராஷ்ட்ரத்தில்
திடமாகப்பாடி னார்ஸ்ரீகுருகாதி ரெங்கநாத பாகவதர் ! 30
சௌராஷ்டிர மொழி ஸமூகம்தான் வளரநம்
சௌரியம்மிக்க சலேம்கவிஞர் நன்னையர் என்பார்
ராமநாம ராமாயணந் தன்னை இனிதேபாடி
ராமன்பால் தாம்கொண்ட மீளாக்காதலை வெளிப்படுத்திட்டார் !
மதுரைதந்த கவிராஜ அஷ்டாவதானி பதுமனாபையர் 40
புதுமையாய் படைத்திட்டார் சப்தரிஷி ராமாயணத்தை !
அன்னவரின் வழிகளில் அனிவரும் களிப்புற
சொன்னபுஷ்பமாய் அவதரித்தார் நம்மினிய சுந்தரகீஷ்ணு !
ஸ்ரீமத் அழகரார்யர் அவதாரம்
பல்லவி
அவதாரம் செய்தாரே அழகரார்யர் – நம்பெருமைவளர
அவதாரம் செய்தாரே அழகரார்யர் !
( அவதாரம் செய்தாரே…)
அனுபல்லவி
சௌரஷ்டிரச் ஸமூகம் சிகரமதி லேரிட
வௌவியே கலைமகள் அலைமகள் சேர்ந்திட
திவ்வியக் குழந்தையென எல்லோரும் விரும்பிட
பவ்வியமாய் நம்ரங்கன் பணிந்து போற்றிடும்
( அவதாரம் செய்தாரே…)
சரணம்
1 . நாரணன் மிகநல்லவன் நம்மனைவரையும் காப்பவன்
பூரணமாய் நின்று மூவடி யலந்தே
பேராபதவி மாபலிக்களித்தே திருவோண நன்னாளில்
( அவதாரம் செய்தாரே…)
2 . தில்லையம்பல நடராசர் பாதம்வணங்கும் பக்தன்
எல்லையில் லாதபக்தியும் பாசமுள்ள நந்தன்
சொல்லற்கரிய சாதனைகள் புரிந்த ஓணநன்னாளில்
( அவதாரம் செய்தாரே…)
3 . கண்ணை பிடுங்கிக் காலத்தீசனுக் கப்பியே
கண்ணப்ப னென்றே கனிவாய்கட வுள்கூறிய
திண்ணன் பிறந்தநாள் திருவோண நன்னாளில்
( அவதாரம் செய்தாரே…)
4 . அரிதரிது என்பர்சிவ நாடியவர் வாழ்க்கைகள்
பெரிதுபெரிது பெரியபுராணம் கூறிடுமவர் பெருமைகள்
பெரியபுராணச் சேக்கிழார் தோன்றிய திருஓணநாளில்
( அவதாரம் செய்தாரே…)
5 . வேதவித்தகர் நரசிம்மர் எண்ணம் பலித்திட
மாதுசிரோன்மணி ஸ்வர்ணாள் மனம்தான் மகிழ்ந்திட
தீதுதீர் பெரியோர் நித்தம் போற்றிட
( அவதாரம் செய்தாரே…)
சாதனைகள் செய்தாரே நம்சுந்தரகீஷ்ணு
பல்லவி
சாதனை புரிந்தாரே – நம்சுந்தரகீஷ்ணு
சாதனை புரிந்தாரே
( சாதனை புரிந்தாரே…)
அனுபல்லவி
அன்றொரு ஞானசம்பந்தன் ஞானவெள்ளம் பொழிந்திட
இன்ரூனம் சுந்தரகீஷ்ணு எல்லோரும் வியந்திட
கண்டோர் கேட்டோர் களிப்புற்று மகிழ்ந்திட
( சாதனை புரிந்தாரே…)
சரணம்
1 . அருமைத் தந்தையார் ஐந்தாம் வயதினில்
அழகாய் பிரமோப தேசம் புரிந்திட
அணுவும் பிசகாது அழகாய்க் கற்றே
( சாதனை புரிந்தாரே…)
2 . ஆறாம் வயதினில் அனைத்து சிறுவரும்
தாரளாமாய் விளையாடி மகிழ்ந்து காலம்போக்கிட
சாரீகாமாபா வென்று சங்கீதம் பயின்றே
( சாதனை புரிந்தாரே…)
3 . தந்தை நரசிம்மர் வியந்து பாராட்ட
எந்தை யழகர் ராகங்களின் சிறப்பினை
விந்தையாக விளக்கங்கள் பல சொல்லியே
சாதனைகள் செய்தாரே நம்சுந்தரகீஷ்ணு
( சாதனை புரிந்தாரே…)
4 . பக்த பிரகலாதன் பரமனைப் பணிந்தான்
பாத்து வயதினில் பாலகன் சுந்தரகீஷ்ணு
மந்திரம் பயின்று மகிமைகள் செய்தே
( சாதனை புரிந்தாரே…)
5 . எண்ணிரண்டு வயது இளைஞர் களித்திருக்க
பன்னிரண்டு வயதில் பலரும் வியந்திடஸ்ரீ
லக்ஷ்மிந்ரு சிம்ஹர்மேல் கீர்த்தனை பலபாடியே
( சாதனை புரிந்தாரே…)
குருவை மாணவர் சிக்கெனப் பிடித்தார்
1 . சோழவளநாட்டில் காவிரித்தாய் சோர்வைநீக்கி வளம்கூட்டி
வாழ வழி கேட்டு வந்தவரை வாழ்விக்க; வந்தவர்கள்
நாளுமியல் இசைநுண்கலை என்றே வளர்ந்திட்டார்
கேளும்சுற்றமுமாய் வாழ்ந்திட்டார் நின்று நிலைத்திட்டார் !
2 . காலம்காலமாய் தமிழ்பேசிய தஞ்சைமண்ணில் சௌராஷ்டிரம்
மறுவாக மனம்பரப்ப மராட்டியம் தெலுங்கென்றே
விரிவாகப் பலமக்கள் வந்து நிறைந்தார் வளம்பலபெற்றார்
பெரிதாக தாம்வளர்ந்தே தமிழ்க்கலைகளும் வளர்த்திட்டார்
3 . தஞ்சைமன்னர் போற்றிடவவர் சபையினில் வரகவிஞர்
நெஞ்சைக் கவர்ந்திழுக்கும் வெங்கடேசன் திருநாமதார்
கொஞ்சமும் மாசிலாக் குணக்குன்று ஞானசீலர்தாம்
சிந்தைகவர்ந் திட்டார்ணம் மழகருளும் புகுந்திட்டார்
4 . இளைஞரழகர் இனிதானஸ்ரீமுகம் வேங்கடசூரிகள்
மழையாக உள்ளத்தில் மகிழ்ச்சியைத் தான் தந்ததே
விழைவோரின் விருப்பைத் தீர்த்தல் பெரியோர்தம் கடனன்றோ?
அழைப்பை ஏற்றழகர் மனமகிலச் சேலம்வந்தார்
5 . கண்ணனின் திருக்கோவில் கண்டவர்கள் மனம்நிறைக்குமம்
மன்னவனின் கோவிலில்தான் எத்தனயோ வைபவங்கள்
முன்னரும் நடந்துள வேங்கடசூரிகள் வருகைபுரிந்த
பின்னரும் நடந்துளவாயி னுமிதுபோலருமை யார்தான்கண்டார்?
6 . வாலாஜபேட்டை ஸ்ரீவேங்கட ரமணரின்சீடர் வேங்கடசூரிகள்
ஞாலம்போற்ற தஞ்சை ஆண்ட சிவாஜியின் அவைப்புலவரை
காலமழிந்தாலும் நின்றுநிலைத் திருக்குங்காவியம் பாடியவரை
கோலாகலமாய் சேலம்நகர மக்கள்வரவேற்று மகிழ்ந்தார்கள்.
7 . கோசலையின் நன்மைந்தன் கோமகனாமி ராமன்கதையை
பாசமும் பரிவும் கூட்டிநேசமும் நெகிழ்வும் சேர்த்து
ஆசையுமஅன்பும் அவன்பால் நிறைந்து பெருகிட
தாசர் வேங்கடர் தாளந்தவராது கோவிலில் உபன்யாசித்தார்
ஸ்ரீமத் அழகரார்யர் பஞ்சல் சரித்ரு
சௌராஷ்டிர குலத்தனமாம் ஸ்ரீமத் அழகரார்யர்
ஒவ்வோரெழுத்தும் ஓர்ந்துபடிய காவியம்பஞ்சல் சரித்ரு
பலநூல்களை அறம் விளக்கிப் பரமனருள்விளக் கியவர்
நலமாயப் பாடியிருப்பினும் பஞ்சல்சரித்ரு ஒன்றேதான்
தலைக்கணியும் மகுடமாகும்; படிப்போ ருளந்தன்னை
மலைக்கழகு மதன்கருத்துகள்; வாய்விட்டு வியக்க
வைக்கும்தான் செய்தியமைப்பு; உள்ளம் சொக்க
வைக்குமதில் நாம்காணும் கோபியர் கண்ணனின்
லீலைகள் வருணனைகள் எளிதான உவமைகள்
காலையி லுதிக்கும் கதிரவன்போல் உள்ளம்மயங்கும்;
இறைவன் அவனொருவனே மற்றெல்லா மவனேவலே;
குறையேது மில்லாத கோவிந்தனே இயக்கம்;
அவனாட்ட ஆடுகின்ற பொம்மைகள்நாம்; மக்களிடையில்
எவனுமில்லை அவனுக்கிணை என்பதனைப் புலப்படுத்தும்
பஞ்சல்சரித்ரு பக்தியின்மேன்மை பக்தரின்நெளிமை பரமநின்கருணை
எஞ்சலில்லாது எடுத்தியம்புகிறது எல்லோருமிதை படித்திடலாம்;
அந்நாளில் பெண்களுமாங்களும் எப்படித்தான் இருந்தார்கள்
இந்நாளில் அவர்கள்நிலை எத்தனைதான் மாறியதென்று
அறிந்து வியந்திட அழகாக பாடிட
சரியாகஉ தவுமழகச் சான்றோன் பாடிய பஞ்சல்சரித்ரு !
வாடைமெலிந்தே வகையாக ஒதுங்கிக் கொள்ள
கோடைதொடங்கி மரஞ்செடி கொடிக ளெல்லாம்
பழையஇலைகள் சருகுகள் தழைகள் குச்சிகள் வேர்கள்
தலைசாயந்துவிடப் புதுமையைப் புதுபுதுதளிர்கள் மலர்கள்
மெல்லத்தலை தூக்கிமன் பதையை அழகு செய்துமகிழ்விக்க
– தொடரும்
அழகரார்யா கீர்த்தனை
(சௌராஷ்டிரா பாஷா)
ஸ்ரீகம்ச ஜாதி நுத ஸ்ரீ கம்ச ஜாதி நுத சீதா
லக்ஷ்மி சமேத ரகேந்து பிம்பன
நரசிம்ம ராஜி ஹோர் பத்ரேக்ஷணா
– ஸ்ரீ கம்ச
சாது3னு செந்த மிள்ளி சாது3னு செந்த மிள்ளி
சாந்த கு3ன்னுக3 ஜன்லி போ3த3ன
பவாடிகா நரசிம்மா ப4க்தி முக்தி
வாடிகா ராஜிஹோர் பத்ரேக்ஷணா
– ஸ்ரீ கம்ச
கொங்கோ மேனி காய் சங்கு3 கொங்கோ மேனி
காய் சங்கு3 தென்கோ தென்கோ மோன்னு தா4ன்க3
சங்கு நீ2த்கோ சலோசுன்னா நரசிம்மா
து4ம்கி து4ம்கி மல்லோசுன்னா
– ஸ்ரீ கம்ச